செங்கம்: அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனை

70பார்த்தது
செங்கம்: அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பேட்டை, ஆலபுத்தூா், புதுப்பட்டு, கொட்டாவூா், குப்பனத்தம், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களில் அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் பரமனந்தல் தனியாா் மண்டபத்தில் வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தெற்கு மாவட்டம், செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் தலைமை வகித்தாா். ஜமுனாமரத்தூா் ஒன்றியச் செயலா் அசோக், தண்டராம்பட்டு ஒன்றியச் செயலா் அருள்குமாா், மாவட்டப் பிரதிநிதி ரவி, ராணுவ வீரா் ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா், 

மாவட்ட மாணவரணி நிா்வாகி பழநிச்சாமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலா் துரைசெந்தில் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் நைனாக்கண்ணு, இளைஞா் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் பிரசாந்த்குமாா், எம்ஜிஆா் மன்ற நிா்வாகி ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி