ஆரணி - Arani

திருவண்ணாமலை: வீட்டை விட்டு விரட்டிய மகன், தந்தை புகார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத் தீர்வு கூட்டம் நேற்று ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் தேவி, உதவியாளர் கோபி மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ஆர் டி ஓ பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, ஆரணி டவுன் கொசப்பாளையம் மனோகரன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது சகோதரியின் மகன் ஜெயக்குமார் என்பவர் என் வீட்டில் இருந்து எனது உடமைகைளயும், பணத்தை பிடுங்கி கொண்டு, என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தேன். அதன் பின்னர், போலீசார் விசாரித்து எனது வீட்டில் வசிக்க தடை செய்ய கூடாது என ஜெயக்குமாருக்கு போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர். அதன்பின்னர், மீண்டும் நான் வீட்டிற்கு சென்றால் ஜெயக்குமார் வீட்டை பூட்டி என்னை வீட்டில் வசிக்க விடா மல் தகராறு செய்து வருகிறார். அதனால், எனது வீட்டில் ஏதேனும் ஒரு அறையில் என்னை வசிக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.

வீடியோஸ்


திருவண்ணாமலை