திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் ரோட்டரி சங்கத்தின் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 20 தாய்மார்களுக்கு பேரிச்சைபழம், மாதுளை பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் வழங்கப்பட்டது. பி எம் ஆர் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர். அரவிந்த ராமன், சன் SHN, VHN, CDPO சங்கத் தலைவர் சிவமுத்து மேகநாதன், மருத்துவ பணி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.