திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் முதலாம் ஆண்டு கன்று விடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலூர் கண்ணமங்கலம் ஆரணி புதுப்பாளையம் சித்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான கன்றுகள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக இலக்கை நோக்கி துள்ளி குதித்து ஓடின. இவற்றைத் திரளான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.