சுற்றுச்சுவற்றின் மீது மோதிய பேருந்து

84பார்த்தது
சுற்றுச்சுவற்றின் மீது மோதிய பேருந்து
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேருந்து நிலையத்தில் நேற்று தனியார் பள்ளி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சுற்றுச்சுவர் இடித்து உள்ளே சென்றது. இதனால் மின்மாற்றி சேதமடைந்து மின்சாரம் தடைப்பட்டது. அந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் சாலை கடக்காததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் அங்கிருந்த பயணிகள், பொதுமக்கள் வியாபாரிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி