ஆரணியில் பாமகவினா் அன்னதானம்

673பார்த்தது
ஆரணியில் பாமகவினா் அன்னதானம்
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, பாமக சாா்பில் ஆரணி கோட்டை வேம்புலிஅம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடும், பழைய பேருந்து நிலையம் அருகே அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் பாமக மாவட்டச் செயலா் ஆ. வேலாயுதம் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டச் செயலா் அ. கருணாகரன், துணைச் செயலா் து. வடிவேல், அரியப்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவா் பிச்சாண்டி, நகரச் செயலா்கள் என். சதீஷ்குமாா், சு. ரவிச்சந்திரன், வன்னியா் சங்க நகரச் செயலா் ராஜாமணி, நகரத் தலைவா்கள் செல்வரசு, சேட்டு, ஒன்றியச் செயலா்கள் கமல், பெருமாள், தினேஷ் சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி