தி.மலை: தவெக மாவட்ட செயலாளர் செய்த செயல்

68பார்த்தது
தி.மலை: தவெக மாவட்ட செயலாளர் செய்த செயல்
தமிழக வெற்றிக்கழகம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பாரதிதாசனின் இல்லப் புதுமனை புகுவிழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கு வந்திருந்த அமைச்சர் எ.வ.வேலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து தவெக மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு மயில் மாலை, 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்றனர். மேலும் அவரது குடும்பத்தினருடன் நின்று அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

குறிப்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தொடர்ந்து திமுக அரசு மற்றும் அமைச்சர்களை எதிர்த்து அனைத்து மேடைகளிலும் பேசி வரும் நிலையில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தவெக மாவட்ட செயலாளரின் விழாவிற்கு வந்திருந்தது அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக தவெகவின் பொதுச்செயலாளர் புஷ்பேந்திரன் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி