ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்

64பார்த்தது
ஆரணி பொறியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே தச்சூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வரலாற்றில் முதல்முறையாக ஏஐசிடியு நிதியுதவியுடன் மூன்று நாள் பன்னாட்டு கருத்தரங்கு மேம்பட்ட பொருட்கள் அரிதான மற்றும் சிக்கலான தனிமங்கள் என்ற தலைப்பில் துவங்கியது.

இக்கருத்தரங்கு துவக்க விழா நடைபெற்றதில் ஆரணி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி டீன் ஜி. செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். இங்கு தமிழ்நாடு கிராமப்புற அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மேம்பட்ட பொருட்களின் முனைப்பு பகுதிகள் மீதான ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்த கருத்து விழா நடைபெற்றது.

இக்கருத்தரங்கம் அக்டோபர் 21 முதல் 23 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் முக்கிய கருப்பொருளான மேம்பட்ட பொருட்கள் அரிய பூமி மற்றும் சிக்கலான கனிமங்களின் வளர்ச்சி மற்றும் அதனுடைய மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் கிராமப்புற அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே ஆராய்ச்சியினை வளர்க்கும் பொருட்டும் தம் மண்டல மொழிலாளிகளின் மூலம் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏதுவான சூழ்நிலை உருவாக்கும் நோக்கத்தோடு கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி