திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இதன் பேரில், ஆரணியில் நகராட்சி அனுமதி பெறாமல் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை நகராட்சி ஆணையா் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் ஊழியா்கள் அகற்றினா்.
மேலும், பதாகைகளின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது.