திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதிக்கு பட்டுப் பூங்கா அமைக்க பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் R. காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளை குறித்து ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் நேரில் சென்று இடத்தினை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். உடன் ஆரணி நகர மன்ற தலைவர் மணி, மாவட்ட நிர்வாகிகள், திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.