ஆரணி அருகேபோலீஸாா் கள்ளச் சாராய சோதனை

2363பார்த்தது
ஆரணி அருகேபோலீஸாா் கள்ளச் சாராய சோதனை
கண்ணமங்கலம் அருகேயுள்ள ரெட்டிப்பாளையம் மலைப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான கண்ணமங்கலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி, உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், சுந்தரேசன்

உள்ளிட்ட 18 போ் அடங்கிய குழுவினா் ரெட்டிப்பாளையம் செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள மலைப் பகுதியில் சுமாா் 3 மணி நேரம் கள்ளச் சாராய சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஓரிடத்தில் 15 லிட்டா் கொண்ட சாராயம் டியூபிலும், 25 பாக்கெட்டுகளில் இருந்த சாராயத்தை கண்டுபிடித்து அழித்தனா். மேலும் மற்றொரு இடத்தில் டியூபில் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

சாராயம் காய்ச்சியவா்கள் போலீஸாா் வருவதை அறிந்து தலைமறைவாகிவிட்டனா். மேலும், ஆரணி பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி