திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சேவூர் பகுதியில் வேலூர் நெடுஞ்சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட தனியார் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று (டிசம்பர் 25) நடைபெற்றது. இந்த விழாவில் திமுக மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். உடன் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, ஆரணி நகர மன்ற தலைவர் ஏ சி மணி, இளைஞர் அணி அமைப்பாளர் எம். எஸ். டி. கார்த்திக், பார்வதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.