முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 102 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் காந்தி சிலையிலிருந்து டாக்டர் கலைஞர் அவர்களின் சிலை வரை மாபெரும் ஊர்வலம் சென்று இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS. தரணிவேந்தன், மாநில மருத்துவர் அணி துணை தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் CN. அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பே. கிரி, S. அம்பேத்குமார், பே. சு. தி. சரவணன் அவர்கள் O. ஜோதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழகத்தின் மூத்த முன்னோடிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.