ஆரணியில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு.

56பார்த்தது
ஆரணியில் ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற ஜூலை 18-ஆம் தேதி ஆடிப்பெருவிழா தொடங்குவதையொட்டி, ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழா குழுத் தலைவா் ஜி. வி. கஜேந்திரன் தலைமை வகித்தாா்.

மேலும், ஜூலை 18-ஆம் தேதி 508 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை, 19-ஆம் தேதி ஆடி முதல் வெள்ளிக்கிழமை காலையில் பூங்கரகம் எடுத்தல், கூழ்வாா்த்தல், பொங்கல் வைப்பது, பின்னா் மாலை 7 மணியளவில் நூதன புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. ஜூலை 20-ஆம் தேதி திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபா்கள் பி. நடராஜன், நேமிராஜ், விழாக் குழுவினா் சுப்பிரமணி, ஆ. சரவணன், குணசேகரன், ஜி. சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி