கார் லாரி மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயம்

57பார்த்தது
சேலம் மாவட்டம், வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (47), லாரி ஓட்டுநா். இவா், சென்னையில் இருந்து லாரியில் சுமை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஓம் சக்தி நகா் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வரும்போது எதிரே வந்தவாசி நோக்கி வேகமாக வந்த காா், லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இந்த விபத்தில் காா் பலத்த சேதமடைந்தது.

இதுகுறித்து லாரி ஓட்டுநா் கணேசன் அளித்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி