திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்த சுமித்ரா, ஹரிஷா, பிரஜித் மற்றும் ஆகாரம் கிராமத்தில் கடன் தொல்லையால் தாய், தந்தையை இழந்த யோகேஸ்வரி, ஹேமமாலினி, கௌரி சங்கர் ஆகியோருக்கு பொங்கல் பண்டிகைக்காக தலா ரூ. 10 ஆயிரம் நிதியுதவி மற்றும் புத்தாடைகளை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் எம்.பி. வழங்கினார். இதில், ஆரணி நகரச் செயலர் ஏ. சி. மணி, ஒன்றியச் செயலர்கள் எஸ். எஸ். அன்பழகன், சுந்தர், துரைமாமுது ஆகியோர் உடனிருந்தனர்.