திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று மாலை அண்ணா சிலை அருகே
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வீழும் சனாதனம்! வெல்லும் சனநாயகம்!! கலைப்பயண பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடகக் கலைஞர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு சட்டம் பாதுகாக்க ஒன்றுபடுவோம் என பாட்டுப்பாடியும் பேசியும் பரப்புரையாற்றினார்கள். இதில் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.