திரௌபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகளம்

73பார்த்தது
திரௌபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகளம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகின்றது. அதன் முக்கிய நிகழ்வான இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயில் வளாகம் முன்பு களிமண்ணால் பிரமாண்டமான துரியோதனன் உருவபொம்மை அமைத்து, வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மதியம் துரியோதனன், பீமன் வேடமணிந்த நாடக கலைஞர்கள் துரியோதனனை பீமன் வதம் செய்யும் காட்சியிகளை நடித்து காட்டி துரியோதனன் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி