திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பாக காந்தி மார்க்கெட் சாலையில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக் கோரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மது பாட்டில்கள் கையில் ஏந்தி நூதன முறையில் இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். திரளானோர் கலந்து கொண்டு மதுபானம் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.