திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்று சீர்வரிசைப் பொருள்கள் பெற்றனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை, எம். எஸ். தரணிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி. என். அண்ணாதுரை எம். பி. பேசுகையில், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1900 பேருக்கு வளைகாப்பு நடத்தப்படவுள்ளது. இதில், முதல்கட்டமாக 200 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றார்.