ஆரணியில் நகர மன்ற கூட்டம்

62பார்த்தது
ஆரணியில் நகர மன்ற கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஏ. சி. மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாரி பி. பாபு, நகராட்சி ஆணையர் (பொ) செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ரூ. 1.9 லட்சத்தில் ஆற்காடு சாலை தரைப்பாலம் பகுதியில் ஆற்காடு முப்பது வெட்டி தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாய் கமண்டல நாக நதியில் உடைப்பு சரி செய்யும் பணி, ரூ. 2 லட்சத்தில் ஆரணி நகராட்சிக்குள்பட்ட ஆரணி தச்சூர் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் விநியோக பராமரிப்புப் பணிகளுக்காக புதிய குழாய்கள் மாற்றியமைக்கும் பணி, ரூ. 9 லட்சத்தில் சிறு மின்னிசை பம்புகளுக்கு தேவையான புதிய மோட்டார்கள், 9.50 லட்சத்தில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பராமரித்தல் மற்றும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார்கள் உதிரி பாகங்கள் பழுது மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. திமுக உறுப்பினர் சுப்பிரமணியன், அரவிந்த், காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயவேலு ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோரினர்.

தொடர்புடைய செய்தி