மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கண்ணமங்கலத்தில் பாஜகவினர் கையொப்ப இயக்கம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகே மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்க பிரசாரம் நடைபெற்றது.
இதில் பாஜக மாவட்டத் தலைவர் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் சாசா வெங்கடேசன் வரவேற்றார். நிர்வாகிகள் டி. ஆறுமுகம், கே. சுகுமாரன், எஸ். மாதவன், பி. மூர்த்தி, ஜெ. ராஜாஜி, எம். செந்தில், ஏ. இந்துமதி, பாலாஜி, புவனேஸ்வரிபன்னீர், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.