திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் அதிமுகவினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேரவை மாவட்டச் செயலர் பாரி பி. பாபு தலைமை வகித்தார். கட்சியின் நகரச் செயலர் ஏ. அசோக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் கலந்துகொண்டு அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலர் வனிதா சதீஷ், ஒன்றிய அவைத் தலைவர் சேவூர் ஜெ. சம்பத், பேரவை ஒன்றியச் செயலர் புங்கம்பாடி சுரேஷ், நகர பேரவைச் செயலர் பாரதிராஜா, ஆரணி நகர்மன்ற உறுப்பினர்கள் சுதா குமார், நடராஜன், வி. கே. வெங்கடேசன், விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.