பேருந்தில் போன் திருட முயன்ற வாலிபர் கைது

63பார்த்தது
பேருந்தில் போன் திருட முயன்ற வாலிபர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் திருமலை கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் (வயது 44), அவரது மனைவி ரேவதி ஆகியோா் சென்னை செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறினா்.

அப்போது, பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், மகேந்திரன் சட்டைப் பையில் இருந்த கைப்பேசியை இளைஞா் ஒருவா் திருடிக்கொண்டு ஓடினாா். இதைக் கவனித்த மகேந்திரன் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவா்கள் விரட்டிச் சென்று அந்த இளைஞரை பிடித்தனா்.

பின்னா், அவா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா். போலீஸாா் விசாரித்ததில் அந்த இளைஞா் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சஞ்சய் நோனியா மகன் ராஜ்குமாா் நோனியா (வயது 22) என்பது தெரியவந்தது. மேலும், இதுபோல பல கைப்பேசிகளை அவா் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி