திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சுகுமார் (வயது 25). மினி வேன் டிரைவராக
வேலை செய்து வந்தார்.
இரவு பணி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். வடுகசாத்து மின்வாரிய அலுவலகம் அருகே சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோட்டார்சைக்கிள் ஜல்லி குவியல் மீது மோதியது. இதில் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த சுகுமார் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.