திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெசல் விழுப்புரம் ஆரணி நெடுஞ்சாலை கூட்ரோடில் உள்ள பெட்டிகடையில் 200கிலோ தடை செய்யப்பட்ட போதை வஸ்த்துக்களை பதுக்கி வைத்திருந்த பறிமுதல் செய்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் கடைக்கு சீல் வைக்கபட்டன.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.