உடுமலையில் பக்தர்கள் கோரிக்கை நிறைவேறுமா?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மாலகோயில் உள்ளது. இங்கு பொங்கல் அன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆண்டுதோறும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் கால்நடைகளை பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோசாலை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனவே வரும் காலத்தில் கோசாலை துவங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு மீண்டும் மனு அனுப்பி உள்ளனர்.