உடுமலையில் அருங்காட்சிகம் அமைக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி, உப்பாறு என பழமையான ஆற்றங்கரை நாகரிகத்தின் தடயங்களை உள்ளடக்கிய உடுமலை பகுதியில் தொல்லியல் துறை அலுவலகம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்து தொன்மையான வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும். இதனால் திறந்த வெளியில் சிதைந்து வரும் கல்வெட்டுகளை அருங்காட்சியத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுடன் பழங்கால சின்னங்களை பாதுகாக்க முடியும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.