திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய 37 96 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் நான்கு மாத சம்பளம் பாக்கிய உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை ஒன்றிய அலுவலகத்தை 500க்கும் மேற்பட்டோர் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் அஞ்சலிங்கம் தலைமையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும், வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், நகர்புற வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 3 ஆயிரத்து 796 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திபட்டது. உடுமலை ஒன்றிய செயலாளர் கனகராஜ் டி ஏ டி யு மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன் உடுமலை ஒன்றிய தலைவர் ராஜகோபால் உடுமலை ஒன்றிய செயலாளர் தமிழ் தென்றல் ஆகியோர் கலந்து கொண்டனர்