திருப்பூர் மாவட்டம் உடுமலை பைபாஸ் ரோட்டில் மத்திய பஸ் நிலையம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடைபாதை போதித பராமரிப்பு இல்லாமல் அதாவது கம்பிகள் உடைந்தும் சேதம் ஆகியும் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடக்க வேண்டிய நிலை உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளது.