உடுமலையில் வேகத்தடைக்கு வெள்ளை கோடு வரையும் பணி

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக தளிரோடு உள்ளது. இந்த ரோட்டில் அரசு ஆண்கள் பள்ளி மேல்நிலை எதிரில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன் வேகத்தடை பகுதியில் வெள்ளை கோடு வர்ணம் பூசி இருந்த நிலையில் தற்பொழுது குறுகிய நாட்களில் வெள்ளை நிற கோடுகள் மறைந்து விட்டது. 

இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை பகுதியில் வெள்ளைக்கோடு வரையும் பணியினை தீவிரமாக துவக்கி உள்ளனர். இருப்பினும் இருளில் ஓளிரும் ரிஃப்ளெக்டர் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி