திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் இலுப்பநகரம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் ஊராட்சிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட வால்வு வழியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போழுது இந்த பகுதியில் கூட்டுக் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகின்றது. எனவே அதிகாரிகள் ஆட்சியை காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.