திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் நீர் நிடிப்பு பகுதிகளான பாம்பாறு தூவானம் போன்ற பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வந்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து 1000 கன அடிக்கு மேல் இருந்தது தற்பொழுது மழை குறைந்த காரணத்தால் இன்று 627 கனடியாக குறைந்து உள்ளது. தற்சமயம் மொத்த தொண்ணூறு அடியில் 88. 75 அடியும் நீர் வெளியேற்ற 440 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது