உடுமலை தேவராட்டம் ஆடி பொங்கலை வரவேற்கும் கிராம மக்கள்!!

58பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான
பொட்டையம் பாளையம் லிங்கமாவூர், கொங்கல்நகரம் புதூர் , சனுப்பட்டி வல்லகுண்டபுரம் , மரிக்கந்தை , அம்மாபட்டி உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிராம மக்கள் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதங்களில் இரவு நேரங்களில் காளைகளுடன் சல கெருது தேவராட்டம் ஆடி வருகின்றனர் மேலும் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சலகெருது மறித்தல் எணும் விளையாட்டை ஆடுவார்கள் , குச்சிகளை நீட்டினால் காளைகள் முட்ட வரவும் குச்சிகளை குறுக்கே வைத்தால் காளைகள் நிற்கவும் பழக்கி ஆடும் இந்த ஆட்டதோடு இல்லாமல் உருமி இசைகருவி முழுங்க தேவராட்டம் , இரட்டையர் தேவாராட்டம் ஆண்கள் ஆடுவார்கள் , மேலும் பாரம்பரியமான பாடல்களுக்கு பெண்கள் கும்மி ஆட்டம் ஆடையும் பொங்கலை கொண்டாடினர். பொதுமக்கள் கூறியதாவது பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய அறிவுரையின் பேரில் மார்கழி மாதத்தில் தேவராட்டம் ஆடி வருகின்றோம் அதனால் உடலுக்கு புத்துணர்ச்சியாக உள்ளது மேலும் கால்நடைகள் நோய் நலமாக இருக்கும் என நம்பிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி