உடுமலையில் யானைகள் உறங்கும் வீடியோ வைரல்

16195பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில மாதங்களாகவே வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகின்றது. இந்த நிலையில் தண்ணீரை தேடி நிலப்பரப்புக்குள் வனவிலங்குகள் அதிகளவு வர துவங்கிய உள்ளன. இந்த நிலையில் ஏழுமலையான் கோவில் பகுதியில் காட்டு யானைகள் தண்ணீரைத் தேடி அதிகளவு வரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் இப்பகுதியில் யானைகள் உறங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாக வருகின்றது. மேலும் உடுமலை பகுதியிலிருந்து கோடந்தூர் , சின்னாறு, மூணாறு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி