உடுமலை அருகே வேணுகோபால கிருஷ்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

81பார்த்தது
உடுமலை அடுத்த சின்ன வாளவாடி கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. கோவிலை புனரமைப்பு செய்து முன் மண்டபம் கட்டி கும்பாபிஷேக விழா நடத்துவதென ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. மங்கள இசை, கும்ப ஆராதனை, வாஸ்து நாத ஹோமம் உள்ளிட்டவையும், யாகசாலை பிரவேசமும், கும்பஸ்தாபனம் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை மற்றும் 2-ம் கால பூஜையும், மாலை 5 மணிக்கு மூல விக்கிரகங்கள் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், விமான கலசம் பிரதிஷ்டை செய்தல் நிகழ்வும், யாக பூஜையும் நடைபெற்றது. 

கடம் புறப்பாடு நிகழ்வும் விமான கலசத்திற்கு கும்பாபிஷேக விழாவும், அதைத் தொடர்ந்து வேணுகோபாலசாமிக்கு பிராண பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெற்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாலை 3 மணிக்கு ருக்குமணி சத்தியபாமா சமேத வேணுகோபால்சாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வில் வாளவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்தி