திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் இருந்து திருமூர்த்தி அணை அமராவதி அணைக்கு செல்லும் சாலை ஒன்று உள்ளது இதன் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று வருகின்றனர் இந்த நிலையில் இங்கு உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அவசர தேவைக்கு செல்லும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர் எனவே இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்