திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும் நான்கு ரோடு சந்திப்பில் பெதப்பம்பட்டி உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தற்பொழுது வரை ரவுண்டானா அமைக்கப்படாமல் உள்ளது. எனவே ரவுண்டானா அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.