திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி சாலை வழியாக அமராவதி அணை திருமூர்த்தி அணை மூணார் உட்பட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மூணாறில் இருந்து உடுமலை வழியாக வரும்போழுது நூலகம் அருகில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை மறைக்கப்பட்டுள்ளது. தற்போழுது மூணாறில் இருந்து வரும்போது நூலகம் முன்புள்ள மரக்கிளைகளால் பெயர்பலகை மறைக்கப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.