திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது இந்த நிலையில் பொதுமக்கள் சாலை கடப்பதற்காக கடன் சில வருடங்களுக்கு முன்பு 1. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லிப்ட்டுடன் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது இவை தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் வெறும் காட்சி பொருளாகவே உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடை மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.