திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 34வது அகில இந்திய உலக கியோகுஷின் காரத்தே போட்டி தமிழ்நாடு கிளை மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் உடுமலை சென்ட்ரல் சார்பில் நடைபெற்றது. கரத்தே போட்டிக்கு டெல்லி மேற்கு வங்காளம் அசாம் பீகார் ஆந்திரா தெலுங்கானா ஜார்க்கண்ட் மும்பை பஞ்சாப் கேரளா அந்தமான் மகாராஷ்டிரா மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். குமித்தே மற்றும் கத்தா என்ற இரு பிரிவுகளில் எடை மற்றும் வயது அடிப்படையில் 70 வகையான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி துவக்கி வைத்தார்.
உலக யோகிஷின் கராத்தே அமைப்பு தமிழ்நாடு கிளை தலைமை பயிற்சியாளர் ஞான பண்டிதன், லயன்ஸ் கிளப் ஆப் உடுமலை சென்ட்ரல் தலைவர் முருகேசன், இந்திய கராத்தே சங்கத் தலைவர் வசந்தகுமார், சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், உடுமலை அனுஷம் திரையரங்கம் உரிமையாளர் சஞ்சீவி சுந்தரம் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் அசத்திய நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.