திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடி பகுதியை சேர்ந்தவர் நவீன் (21 ). கட்டிட தொழிலாளி. இவர் தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கித் தருமாறு கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவரது பெற்றோர்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி சமாதானப் படுத்தி சிறிது காலம் செல்லட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் மோட்டார் சைக்கிள் மீது இருந்த மோகத்தால் நவீன் மன வேதனைகளில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது நவீன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அமராவதி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.