உடுமலை: மக்காச்சோளத்தை நாசம் செய்த காட்டுப் பன்றிகள்

78பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் மக்கசோளம் தற்போது பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் இலுப்பு நகரம் ஊராட்சி எல்லப்ப நாயக்கன் புதூர் கிராம பகுதியில் விவசாயி ஒருவர் மக்காச்சோளம் அதிக அளவு சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் ஏக்கருக்கு 35 ஆயிரம் முதல் 45ஆயிரம் வரை செலவாகிறது.
இந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்கள்
90 நாட்களை கடந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றது.
இந்த நிலையில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள காற்றில் உள்ளே புகுந்து விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது எனவே வருவாய் துறையும் வனத்துறையும் இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி