உடுமலை: கணக்கம்பாளையம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

67பார்த்தது
உடுமலை அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், கே. ஈஸ்வரசாமி, எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. மெய்ஞானமூர்த்தி வரவேற்புரை வழங்கினார். 

முதல் நிகழ்வாக ஊராட்சியின் வளர்ச்சிக்கு வரி செலுத்தி உதவிய பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும், 2-ஆம் பரிசாக அரை கிராம் தங்க நாணயமும், 3-ஆம் பரிசாக கால் கிராம் தங்க நாணயமும், 50 நபர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் 60 நபர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. 7 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 3 பேட்டரி வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன. 

இவை அனைத்தும் ஊராட்சி மன்றத் தலைவர் லதா என்ற காமாட்சி அய்யாவு சொந்தச் செலவில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் உடுமலை ஒன்றிய குழுத் தலைவர் மகாலட்சுமி முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி