திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக சார்பில் திருஉருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் மாசித்துறை, மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, மாநிலத் துணைச் செயலாளர் கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சபரி முத்துவேல், முன்னாள் மாவட்ட பொருளாளர் வேணுகோபால் மற்றும் ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தேவ சேனாதிபதி, மணி, முத்துலிங்கம், மகேஷ் குமார், ராஜேந்திரன், முருகன், திருமலைசாமி, பெருமாள் சாமி, நாகராஜ், தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.