உடுமலை: பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

85பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் சில தினங்களாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மழை குறைந்த காரணத்தால் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி