உடுமலை: 17 ஊராட்சிகளில் மூன்று நாள் குடிநீர் நிறுத்தம்

53பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியத்தில்
குடிநீர் குழாய் மாற்றும்
பணி காரணமாக முதல் 3 நாட்களுக்கு 17 ஊராட்சிகளில் குடிநீர் வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருப்பூர் கோட்ட நிர்வாக பொறியாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருமூர்த்தி அணை தளி வாய்க்காலை நீர் ஆதாரமாகக் கொண்டு 5 பேரூராட்சிகள் மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஒன்றியங்களை சேர்ந்த 318 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் குழாய்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது பழைய நீர் ஏற்றும் குழாய்களில் இருந்து இணைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 27ஆம் தேதி (இன்று) முதல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஆலம்பாளையம், ஆண்டியூர், போடிப்பட்டி, சின்ன குமாரபாளையம், கணபதிபாளையம், ஜல்லிபட்டி, கணக்கம்பாளையம், குரல் குட்டை, குறிச்சிக்கோட்டை, வடபூதி நத்தம், பள்ளபாளையம், பெரிய வாளவாடி பெரிய பாப்பனூத்து ஆர். வேலூர் , ராகல் பாவி , தின்னப்பட்டி, உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி