உடுமலை: அங்கன்வாடி மையங்களுக்கு பொருட்கள் வழங்கல்

66பார்த்தது
உடுமலை: அங்கன்வாடி மையங்களுக்கு பொருட்கள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக அங்கன்வாடி மையங்களுக்கு பல்வேறு நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களும் உள்ளன. நடப்பாண்டுக்கான விளையாட்டுப் பொருட்கள் உடுமலை வட்டார அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டன. உடுமலை சுற்றுப்பகுதியில் 136 மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி