உடுமலை: பொங்கல் விழாவில் வருவாய் கோட்டாட்சியர் அறிவுரை!!

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே
ஆர். கே. ஆர் ஞானாதயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இன்று பொங்கல் விழா பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் பேசும் பொழுது. இன்றைய நாகரீக உலகில் தொலைபேசியில் பயன்பாடு அதிகமாக உள்ளது தொலைபேசியில் நன்மைகள் தீமைகள் இருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களின் பெற்றோர் தொலைபேசியின் செயல்பாடுகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் படிப்பு விஷயத்தில் பெற்றோர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது அவர் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் முக்கியமானது கடமையாகும் என்று பேசினார் மேலும் பொங்கல் திருவிழாவில் மக்களிசை இசை கலைஞர்கள் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவரின் கிராமிய பாடல்கள் சினிமா பாடல்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி குழந்தைகளின் நடனங்கள் விழாவை கண்டு களிக்க வருகை புரிந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது
இந்த நிகழ்வில் கல்வி நிறுவனங்களின் தலைவர்
ஆர் கே ராமசாமி மற்றும் செயலாளர் கார்த்திக் குமார் மற்றும் எஸ் எம் நாகராஜ் சத்தியம் பாபு மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முக்கிய பெருமக்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி