திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேரூராட்சி அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் உடுமலைப் பேரூராட்சி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் வேண்டுகோளுக்கு இணங்க நோயாளிகள் பயன்பெறும் வகையில் உடுமலைக் கிழக்கு அரிமா சங்கத்தின் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டில்கள் வழங்கப்பட்டன. இரண்டு கட்டில்களை கோட்டாச்சியர்குமார் வழங்கினார். இந்த நிகழ்வில் தலைவர், செயலாளர்கள், பொருளாளர், வட்டாரத் தலைவர், சுற்றுச்சூழல் மாவட்டத் தலைவர், கலாச்சார சேவைகள் மாவட்டத் தலைவர் மற்றும் உடுமலைக் கிழக்கு அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.